Wednesday, March 23, 2011

ஒரு மொக்கை கவிதை

ஓடும் பேருந்தில்
உடன்வந்த குடிமகனால்
விளைந்த குமட்டலில்
எழுந்த யுக்தி

எழுந்த யுக்தியை
உள்ளத்தில் தேக்கி
வெள்ளை தாளில்
இடுகிறேன் கவிதையாய்

வாந்தி

உந்தி மிகுவதால்
உந்தியில் இருந்து
முந்தி வருவது வாந்தி..

அஜீரணத்தை அறிவிக்கும்
அபாய அறிவிப்பு வாந்தி..

உடல் வருத்த ஓங்கரித்தால்
உடன் வருமே வாந்தி..

ஓட்டுநரின் ஒப்பற்ற திறத்தால்
ஒய்யார வளைவில்
சக பயணி எடுக்கும்
சன்னலோர வாந்தி..

'குடி'மகன்கள் மனம் மகிழ
நிறைவு தரும் வாந்தி - அவர்
கூத்தாடி கொண்டாடும்
கும்மாள வாந்தி..

தாரத்தின் தாய்மையை
தந்தி போல் தரும்
இன்ப வாந்தி - இது
கர்ப்பஸ்திரீ வெறுக்கும்
கஷ்ட வாந்தி

மணவாளன் வீட்டில்
மனைவிக்கு மதிப்பு ஈட்டும்
வரம் - வாந்தி

வாந்தி வாந்தி வாந்தி
மழலை வேண்டிடும் பெண்டிர்க்கு
இது தரும்
சாந்தி !!!